மறுபடியும் 'லியோ' பார்க்கும்போது 15 நிமிஷம் முன்னாடி போயிடுங்க: கவுதம் மேனன்

  • IndiaGlitz, [Friday,October 20 2023]

‘லியோ’ திரைப்படத்தை பார்க்க செல்பவர்கள் படம் போடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு தியேட்டருக்கு சென்று விடுங்கள் என்று இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

விஜய், திரிஷா நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘லியோ’ திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘லியோ’ படம் வெளியான தியேட்டர்களில் ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இன்னும் ஆன்லைனில் கூட வெளியாகாத இந்த ட்ரெய்லர் ‘லியோ’ படம் திரையிடுவதற்கு முன் திரையிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கவுதம் மேனன் வெளியிட்டுள்ள வீடியோவில் ’துருவ நட்சத்திரம்’ படம் போடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு திரையரங்கிற்கு சென்று விடுங்கள் என்றும் அப்போது ’துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரைலர் திரையிடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் ’துருவ நட்சத்திரம்’ ட்ரெய்லர் ஆயுத பூஜை தினத்தில் ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

சியான் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

More News

நேற்று டிரெஸ் போச்சு, இன்னிக்கு சாப்பாடு போச்சு.. வச்சு செய்யும் பிக்பாஸ்..!

நேற்றைய டாஸ்க்கில் தோற்றவர்கள் உடை மாற்ற கூடாது என்றும் அதே உடையில் தான் நான் சொல்லும் வரை இருக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் கூறிய நிலையில் இன்றைய டாஸ்க்கில் தோல்வி அடைந்தவர்களுக்கு

'கபாலி' சாதனையை முறியடிக்காத 'லியோ'.. ரஜினி தான் இன்னும் நம்பர் ஒன்..!

 தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும்  நடுநிலை ரசிகர்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.  

பிக்பாஸ் எவிக்சன்.. ஆபத்தான நிலையில் 3 பெண் போட்டியாளர்கள்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாமினேஷன் செய்யப்பட்டவர்களில்

விஷாலால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விடியல்.. இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம்.!! 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வகித்தும் நடிகர் சங்க செயலாளராகவும் இருந்தும் தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை கொண்டு

அடுத்த வாரம் டைரக்ட் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்.. ஜோவிகா கூறிய காரணம்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று வைக்கப்பட்ட டாஸ்க்கில் பிக் ஹவுஸ் போட்டியாளர்கள், ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்களை வீழ்த்தினர்.