close
Choose your channels

மறுபடியும் 'லியோ' பார்க்கும்போது 15 நிமிஷம் முன்னாடி போயிடுங்க: கவுதம் மேனன்

Friday, October 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘லியோ’ திரைப்படத்தை பார்க்க செல்பவர்கள் படம் போடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு தியேட்டருக்கு சென்று விடுங்கள் என்று இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

விஜய், திரிஷா நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘லியோ’ திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘லியோ’ படம் வெளியான தியேட்டர்களில் ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இன்னும் ஆன்லைனில் கூட வெளியாகாத இந்த ட்ரெய்லர் ‘லியோ’ படம் திரையிடுவதற்கு முன் திரையிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கவுதம் மேனன் வெளியிட்டுள்ள வீடியோவில் ’துருவ நட்சத்திரம்’ படம் போடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு திரையரங்கிற்கு சென்று விடுங்கள் என்றும் அப்போது ’துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரைலர் திரையிடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் ’துருவ நட்சத்திரம்’ ட்ரெய்லர் ஆயுத பூஜை தினத்தில் ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

சியான் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment