12 வருடங்களுக்கு முன்பே 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதையை கோடிட்ட கவுதம் மேனன்!

சிம்பு நடிப்பில் , கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஏராளமான ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இதனால் இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒன் லைன் கதையை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே கௌதம் மேனன் தனது படத்தில் கோடிட்டு காட்டி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஒரு காட்சியில் சிம்பு ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஒன்லைன் கதையை கூறுகிறார்.

இந்த படத்தில் அவர் ஒரு இயக்குனராக நடித்திருக்கும் நிலையில் தயாரிப்பாளரிடம் ’ஒரு சாமானிய இளைஞர் படிப்படியாக முன்னேறி கேங்க்ஸ்டர் டான் ஆக மாறுகிறார்’ என கதையை கூறுகிறார். இந்த கதை தான் தற்போது ’வெந்து தணிந்தது காடு’ படமாக உருவாகி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

12 ஆண்டுகளுக்கு முன்பே தற்போது எடுக்கப்பட்ட படத்தின் கதையை கௌதம் மேனன் கோடிட்டு காட்டிய தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

அட்டகாசமான வில்லத்தன நடிப்பு: தனுஷின் 'நானே வருவேன்' டீசர்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் கலைபுலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நானே வருவேன். ஹீரோ மற்றும் வில்லன்

இன்ஜினியரிங் படித்துவிட்டு தமிழ் சினிமாவில் கலக்கும் 5 பிரபலங்கள் பற்றி தெரியுமா?

இந்தியாவில் பொறியாளர்களின் பங்களிப்பைப் பாராட்டுவதற்காகச் சிறந்த இன்ஜினியர் எனப் பாரட்டப்படும் விஸ்வேஸ்வரய்யாவின்

கார்த்தியின் 'சர்தார்' படத்தின் செம அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்: ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

படுக்கையில் கட்டிப்பிடித்து உருளும் ஷிவானி நாராயணன்: கொடுத்து வைத்த ஜீவன் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் தனது செல்ல நாய் குட்டியை கட்டி பிடித்து படுக்கையில் உருளும் வீடியோவை வெளியிட்டு உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது

250 பெண் ஸ்டண்ட் கலைஞர்களுடன் ஆக்சன் காட்சி: யார் படத்தில் தெரியுமா?

பிரபல இயக்குனர் ஒருவர் இயக்கி வரும் படத்தில் ஹீரோ, 250 பெண் ஸ்டண்ட் கலைஞர்களுடன் மோதும் காட்சி படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.