பாங்காக் வெடிகுண்டு சம்பவம். நூலிழையில் உயிர் பிழைத்த பிரபல நடிகை

  • IndiaGlitz, [Tuesday,August 18 2015]

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நேற்று இரவு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் உடல் சிதறி 27 பேர் பலியான செய்தி அனைவரையும் உலுக்கியுள்ள நிலையில், இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு வெகு அருகில்தான் நடிகை ஜெனிலியா இருந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக அவர் எவ்வித ஆபத்தும் இன்றி உயிர் பிழைத்தாகவும் தற்போது தகவல்கள் வந்துள்ளது.


ஜெனிலியா நீண்ட இடைவெளிக்கு பின்னர் விளம்பர படம் ஒன்றில் நடிக்க சமீபத்தில் தாய்லாந்து சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். பாங்காக் நகரில் நேற்று வெடிகுண்டு வெடித்த மால் கட்டிடத்தின் எதிரேதான் ஜெனிலியாவும், அவரது கணவர் ரித்தீஷ் தேஷ்முக் தங்கியிருந்தனர் என்றும், குண்டுவெடித்த சத்தமும், அதன்பின்னர் போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ்கள் வரும் சைரன் சப்தமும் தங்களுக்கு நன்றாக கேட்டதாக அவர்கள் தங்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜெனிலியா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு தன்னுடைய இரங்கலையும், குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு தன்னுடைய கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

More News

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பஞ்ச் வசனங்கள். ஒரு பார்வை

தமிழ் திரையுலகில் பக்கம் பக்கமாக வசனம் பேசி வந்த கதாநாயகர்களை சுருக்கமாக அதே நேரத்தில் நறுக்கான வசனம் பேச வைத்த பெருமை மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்களை போய் சேரும்....

'புலி' படத்தின் அமெரிக்க விநியோக உரிமை ரூ.2 கோடியா?

இளையதளபதி விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்பட பலர் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி...

ரஜினி, கமலை அடுத்து விஜய்யிடம் ஆதரவு கேட்ட விஷால் அணி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாகிவிட்டது...

கபாலி டைட்டில் அறிவித்த சிலமணி நேரங்களில் எழுந்த டிரண்டும், பிரச்சனையும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் படத்தின் டைட்டிலை நேற்று இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் அதிகாரபூர்வமாக 'கபாலி' என்று அறிவித்தார் ...

சொந்த பட நிறுவனம் தொடங்கினாரா கார்த்தி?

வயதினிலே' என்ற வெற்றிப்படத்தை தயாரித்த நிலையில், அவரது சகோதரரும் பிரபல நடிகருமான கார்த்தியும் "பிரின்ஸ் புரடொக்ஷன்ஸ்' என்ற பெயரில்...