close
Choose your channels

டைட்டானிக், அவதார் ரீரிலீஸ் வசூலை தொடும் 'கில்லி'.. உடைக்கப்படும் சாதனைகள்..!

Tuesday, April 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக அளவில் சூப்பர் ஹிட் ஆன ’டைட்டானிக்’ ’அவதார்’ போன்ற திரைப்படங்கள் வசூல் செய்த தொகையை சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘கில்லி’ படம் நெருங்கி விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய், த்ரிஷா நடிப்பில், தரணி இயக்கத்தில், வித்யாசாகர் இசையில் உருவான திரைப்படம் ’கில்லி’. பிரபல தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் உருவான இந்த படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தமிழில் 50 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை ’கில்லி’ படம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து ’கில்லி’ திரைப்படம் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வெளியான சில புதிய திரைப்படங்களின் ஓபனிங் வசூலை ’கில்லி’ திரைப்படம் முறியடித்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ’டைட்டானிக்’ ’அவதார்’ ’ஷோலே’ போன்ற படங்கள் நிறைய ரீரிலீஸ் ஆனபோது கிடைத்த வசூல் தொகையை ‘கில்லி’ வசூல் மிஞ்சிவிட்டதாக கூறப்படுகிறது.

உலக அளவில் வசூலில் சாதனை செய்த ’டைட்டானிக்’ திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல் ’ஷோலே’ திரைப்படம் 2013ஆம் ஆண்டும், ‘அவதார்’ திரைப்படம் 2023 ஆம் ஆண்டும் ரீரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில் ‘கில்லி’ படத்தின் ரீரிலீஸ் ’டைட்டானிக்’ ’அவதார்’ ’ஷோலே’ படங்களின் ரீரில்ல்ஸ் வசூல் சாதனையை தொட்டுள்ளது. உலகம் முழுவதும் ‘கில்லி’ திரைப்படம் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘கில்லி’ இன்னும் என்னென்ன சாதனைகளை உடைக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.