கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த பிரபலம்: லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு!

உலகநாயகன் கமலஹாசன் நடிக்கவிருக்கும் ‘விக்ரம்’ படம் குறித்த தகவல்களை அவ்வப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் ‘விக்ரம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் கொடுத்த தகவலை தெரிவித்துள்ளார்.

‘விக்ரம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் க்ரிஷ் கங்காதரன் என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே தளபதி விஜய்யின் ‘சர்கார்’ மற்றும் ஒருசில மலையாள படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் படத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ் மற்றும் நரேன் ஆகிய நான்கு வில்லன்கள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்படும் என்றும், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘விக்ரம்’ படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

More News

ஐஐடி மெட்ராஸ் அழிந்தால் என்ன...? பீட்டர் அல்போன்ஸ் காட்டம்...!

சாதிபேதமற்ற கல்வியை முடியாத IIT மெட்ராஸ் இருந்தால் என்ன? அழிந்தால் என்ன? என, பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் காட்டமாக கூறியுள்ளார்.

எஞ்ஜாய் எஞ்சாமி பாடல் கலைஞர் காலமானார்: தெருக்குரல் அறிவு உருக்கமான இரங்கல்!

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் தெருகுரல் அறிவு உள்பட பலர் பாடிய என்ஜாய் என்ஜாய் என்ற பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும்

எனக்கு வர்ற பிரச்சனைக்கு காரணம் நான் உண்மையா இருக்குறதுதான்: சிம்புவின் 'மஹா'டீசர்

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவான 'மஹா' படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி விவகாகரம்: வனிதாவுக்கு சுரேஷ் சக்கரவர்த்தி கொடுத்த பதில்!

நடிகை வனிதா சற்று முன் விஜய் டிவியில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம். 'பிக்பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் கலந்து கொண்டு

இது சாதாரண விஷயமல்ல, ரொம்பவே வலிக்குது: சமந்தா வருத்தம்

வலைதளங்களில் பதிவு செய்யப்படும் நெகடிவ் விமர்சனங்கள் சாதாரண விஷயம் அல்ல என்றும் அதனை பார்க்கும் போது மனம் ரொம்ப வலிக்கிறது என்றும் நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் கூறியிருப்பது