தென்னிந்திய திரைப்படத்திற்கு கோல்டன் குளோப் விருது: பிரதமர் மோடி வாழ்த்து!

  • IndiaGlitz, [Wednesday,January 11 2023]

சமீபகாலமாக பாலிவுட் திரைப்படங்களை விட தென்னிந்திய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன என்பதும் குறிப்பாக எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’, யாஷ் நடித்த ’கேஜிஎஃப் 2’ கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ மற்றும் ரிஷப் ஷெட்டி நடித்த காந்தாரா ஆகிய திரைப்படங்கள் பாலிவுட் திரையுலகினரை திரும்பி பார்க்கும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்காக 6 பிரிவுகளில் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் ’நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்கு விருது கிடைத்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து திரையுலக பிரபலங்கள் எஸ்எஸ் ராஜமாவுலி இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி மற்றும் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஆர்.ஆர்.ஆர்’, பட குழுவினர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதேபோல் உலகநாயகன் கமலஹாசன், இசை புயல் ஏஆர் ரகுமான், இசைஞானி இளையராஜா ஆகியோர்களும் ’ஆர்.ஆர்.ஆர்’ பட குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய திரைப்படத்திற்கு உலக அளவில் கௌரவம் தரும் கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்பட்டு வருகிறது.

More News

ப்ரியா அட்லியின் கர்ப்பிணி போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்!

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா அட்லி தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பதும் சமீபத்தில்

பிரபல சீரியல் நடிகைக்கு விபத்து.. அதிர்ச்சி வீடியோ

பிரபல சீரியல் நடிகை விபத்தில் சிக்கிய நிலையில் காயத்துடன் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதனால தான் நீங்க தளபதி.. விஜய்யை பாராட்டிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

இதனாலதான் நீங்க தளபதி என்றும் கூடிய விரைவில் ஒரு அருமையான விரைவில் சந்திப்போம் என்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

தளபதி விஜய்யின் 'வாரிசு' முதல் காட்சியில் திடீர் மாற்றம்..!

விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில்  அஜித்தின் 'துணிவு' திரைப்படம் நாளை அதிகாலை ஒரு மணிக்கும்,

'வாரிசு' படத்தின் முதல் விமர்சனம் தந்த பிரபலம்!

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தமன் இசையில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.