close
Choose your channels

தளபதி விஜய்யின் 'வாரிசு' முதல் காட்சியில் திடீர் மாற்றம்..!

Tuesday, January 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் நாளை அதிகாலை ஒரு மணிக்கும், ’வாரிசு’ திரைப்படம் நாளை அதிகாலை 5 மணிக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே ’வாரிசு’ படத்தின் விமர்சனத்தை விட ‘துணிவு’ படத்தின் விமர்சனம் முதலில் வந்துவிடும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திடீர் திருப்பமாக இன்று இரவு 8 மணிக்கு சென்னை சத்யம் தியேட்டரில் விஐபிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ‘வாரிசு’ சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்த காட்சி முடிந்தவுடன் நள்ளிரவிலேயே ’வாரிசு’ திரைப்படத்தின் விமர்சனம் இணையதளங்களில் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பல வருடங்களாக விஜய்யின் திரைப்படங்கள் பத்திரிகையாளர்களுக்கு என சிறப்பு காட்சிகள் திரையிடப்படாமல் இருந்த நிலையில் தற்போது திடீரென இந்த படத்தின் மீது வைத்துள்ள அதீத நம்பிக்கையின் காரணமாக பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்படுவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.