விஜய் மில்டனின் 'கோலி சோடா 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,May 02 2018]

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் இயக்கிய 'கோலி சோடா' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது. ரூ.2 கோடியில் தயாரான இந்த படம் சென்னையில் மட்டுமே ரூ.3 கோடியும் தமிழகம் முழுவதும் முதல் இரண்டு வாரத்தில் ரூ.8 கோடி வசூல் செய்து பிரமாண்ட வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'கோலி சோடா 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 18ஆம் தேதி ரிலீஸ் உலகம் முழுவதும் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி, செம்பன் வினோத் ஜோஸ், ரோஹினி, சுபிக்சா, ரேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார். விஜய் மில்டன் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை தீபக் படத்தொகுப்பு செய்துள்ளார். 

More News

பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பிரபல நடிகை

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அம்மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சியும் பிரச்சாரம் செய்து வருகின்றன.

கவர்னரை சந்தித்த திரையுலக பிரபலங்கள்: காரணம் என்ன?

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் சென்னையில் மெளன அறப்போராட்டம் ஒன்றை நடத்தினர்.

ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன்: தற்கொலை செய்த நெல்லை மாணவரின் கடிதம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்றும் தமிழகத்தில் மதுவினால் ஏராளமானோர் அடிமையாகியுள்ளதால் அவர்களது குடும்பம் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் வலியுறுத்தி வருகின்றன.

அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரபல அரசியல்வாதிகள்

தல அஜித்தின் பிறந்த நாள் நேற்று அவரது ரசிகர்களால் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விஜய்சேதுபதிக்கு உணவு ஊட்டிவிடும் சிம்பு: வைரலாகும் புகைப்படம்

ஒரு பிரபல நடிகரின் கால்ஷீட்டை வாங்கி ஒரு திரைப்படம் இயக்குவதே சிரமமான இன்றைய கால்கட்டத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு மற்றும் அருண்விஜய் என நான்கு நடிகர்களை