close
Choose your channels

அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரபல அரசியல்வாதிகள்

Wednesday, May 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரபல அரசியல்வாதிகள்

தல அஜித்தின் பிறந்த நாள் நேற்று அவரது ரசிகர்களால் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அஜித் பிறந்த நாள் வாழ்த்து குறித்த ஹேஷ்டேக் நேற்று முழுவதும் டுவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று அஜித் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள், மற்றும் திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி பிரபல அரசியல்வாதிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.

குறிப்பாக தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக எம்.எல்.ஏ டி..ஆர்.பி ராஜா, பாஜக பிரமுகர் வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களது டுவிட்டரில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

நடிகர் அஜித்குமார் நல்ல உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகளை பெற இந்த பிறந்த நாளில் வாழ்த்துவதாக துணைமுதல்வர் ஓபிஎஸ் அவர்களும், தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த தல அஜித் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும் வானதி சீனிவாசனும், முதுகெலும்பு சிதைந்தது உள்பட பல உடல்நல பிரச்சனையில் இருந்தாலும் வலிகளை வென்று போராடி வெற்றி பெற்ற மிகப்பெரிய கலைஞன் அஜித் என்றும் டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ அவர்களும் தங்களது டுவிட்டர்களில் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அமைச்சர் செங்கோட்டையன் டுவிட்டர் பக்கத்தில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் பக்கமே தலைவைக்காத அஜித்துக்கு அதிமுக, திமுக, பாஜக பிரமுகரகள் வாழ்த்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.