close
Choose your channels

கொரோனா விஷயத்தில் மகிழ்ச்சி செய்தி: சுதந்திரத் தினத்தன்று விடிவு வரும்!!! ICMR அறிவிப்பு!!!

Friday, July 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா விஷயத்தில் மகிழ்ச்சி செய்தி: சுதந்திரத் தினத்தன்று விடிவு வரும்!!! ICMR அறிவிப்பு!!!

 

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி பயன்பாட்டு வரும் என்ற மகிழ்ச்சி செய்தியை இந்திய மருந்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்து இருக்கிறது. கடந்த ஜுன் 30 ஆம் தேதி பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் பூனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் இரண்டும் இணைந்து COVIAXIN என்ற புதிய தடுப்பூசியை தயாரித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்த தடுப்பூசி ஏற்கனவே விலங்குகளிடம் சோதனைக்கு உட்படுத்தப் பட்டதாகவும் மனிதர்களின் மீதான சோதனைக்கு ICMR ஒப்புதல் வழங்கியதாகவும் கூறப்பட்டது.

தற்போது வருகிற 7 ஆம் தேதி COVIAXIN தடுப்பூசி இரு கட்டமாக பிரித்து மனிதர்களின் மீது சோதிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் மருந்து குறித்த ஆராய்ச்சியை மிக விரைந்து நடத்துமாறு ICMR தேசிய வைரலாஜி விஞ்ஞானிகளைக் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மனிதர்களின் மீதான சோதனை முயற்சியில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட கொரோனா தடுப்பூசி வருகிற சுதந்திரத் தினத்தன்று கிடைக்கும் என ICMR சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தேசிய வைரலாஜி நிறுவனம் தயாரித்துள்ள COVIAXIN இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் தகவல் அளித்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து வருகிற 7 ஆம் தேதி இரு கட்டமாக பிரிந்து மனிதர்களின் மீது சோதனை செய்யப்பட இருக்கிறது.

மேலும், அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் காடில் ஹெல்த்கேர் லிமிட் எனும் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்து இருக்கிறது. இந்த நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி ஏற்கனவே எலி, முயல், கினியா, பிக், மைஸ் போன்ற விலங்குகளிடம் சோதனை செய்து பார்க்கப் பட்டதாகவும் அதில் நம்பிக்கை அளிக்கும் வகையில் நல்ல முடிவுகள் எட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது அந்நிறுவனத்திற்கும் மனிதர்கள் மீதான சோதனையை நடத்திக் கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து இந்தியாவின் இரண்டாவது கொரோனா தடுப்பூசியும் வருகிற 7 ஆம் தேதி மனிதர்கள் மீது சோதனைக்கு உட்படுத்தப் பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.