ரூ.75 ஆயிரம் கோடி இந்தியாவில் முதலீடு: பிரதமருடன் உரையாடிய பின் சுந்தர்பிச்சை அறிவிப்பு

பிரதமர் மோடியுடன் உரையாடிய சில நிமிடங்களில் இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யவுள்ளதாக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் இன்று உரையாடினர். இந்த உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் ’கொரோனா தாக்கம் முதல் இந்திய விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர், தொழில்நுட்பம் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று காலை நானும், கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சையும் உரையாடினோம்.'' என்று பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து சுந்தர் பிச்சை தனது டுவிட்டரில், ‘இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ. 75,000 கோடி அளவிற்கு இந்தியாவில் முதலீடு செய்யப்படும்’ என்றார். மேலும் இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் மக்களுக்கு டிஜிட்டல் வழியாக தகவல் கிடைக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் இணையதள வசதி கிடைக்க வேண்டும் என்றும், இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப புதிய டிஜிட்டல் தயாரிப்புகளை ஏற்படுத்துதல், சேவைகளை அறிமுகம் செய்வது, வர்த்தக நிறுவனங்களுக்கு தொழிலில் டிஜிட்டல் வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது, சுகாதாரம், கல்வி, விவசாயம் ஆகியவற்றில் தொழிநுட்பம் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும் இன்று நடைபெற்ற கூகுள் பார் இந்தியா'' என்ற கூட்டத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர்களுக்கு நன்றி என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

More News

அமைச்சரா இருந்தா என்ன??? யாரா இருந்தா என்ன??? ரூல்ஸ்னா ரூல்ஸ்தா… கெத்து காட்டிய பெண் போலீஸ்!!!

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே வந்தது மட்டுமல்லாமல் நான் யார் தெரியுமா என்று கெத்து காட்டியவர்களிடம் நீங்கள் யாராக இருந்தால் என்ன

இன்னொரு பெண்ணுடன் தொடர்பு: மும்பை நடுரோட்டில் கணவனை விரட்டி விரட்டி அடித்த பெண்

தனது கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் நட்பு இருப்பதை தெரிந்து கொண்ட பெண் ஒருவர் நடுரோட்டில் கணவனை விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இளம்பெண்ணின் தொண்டையில் 1.5 இன்ச் நீள புழு: பச்சையாக மீன் சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்

25 வயது இளம்பெண் ஒருவர் பச்சையாக மீன் சாப்பிட்டதால் அவரது தொண்டையில் ஒன்றரை இன்ச் நீளத்துக்கு புழு ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா பார்ட்டியில் பங்கேற்ற இளைஞர் பரிதாப பலி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வந்தாலும் இன்னும் ஒரு சிலர் கொரோனா வைரஸ் என்பதே வதந்தி என்றும் கொரோனா வைரஸ்

நான், மரணப்படுக்கையில் இருக்கிறேன்! இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் நடிகையின் பதிவு

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் மரணம் அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது