close
Choose your channels

அமேசான் நிறுவனரைப் பார்த்து பொறாமைபடும் சுந்தர் பிச்சை… என்ன காரணம்?

Thursday, July 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமேசான் நிறுவனரான ஜெஃப் பெஸோஸ் மீது, கொஞ்சம் பொறாமை படுவதாக கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் செயல் தலைவராக இருந்துவரும் சுந்தர் பிச்சை தெரிவித்து உள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாகக் கருதப்படும் அமேசான் நிறுவனம் சமீபத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் வகையில் புதிய நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளது. ப்ளூ ஆரிஜின் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நிறுவனம் விண்வெளிக்கு பலரும் பயணம் செய்யும் வகையிலான விண்கலங்களை தானே சொந்தமாகத் தயாரித்து வருகிறது.

அதோடு விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் அதன் சோதனை ஓட்டம் வரும் ஜுலை 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அந்த சோதனை ஓட்டத்திற்காக அமோசான் நிறுவனத்தின் செயல் தலைவர் ஜெஃப் பெஸோஸ் மற்றும் அவரின் சகோதரர் மார்க் பெஸோஸ் ஆகிய இருவரும் விண்வெளிக்கு பறக்க உள்ளனர். இவர்கள் செல்லும் விண்கலம் பூமிக்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லைக்கோட்டு பகுதியில் இருக்கும் கார்மன்கோடு வரை செல்ல உள்ளது. அதாவது பூமியில் இருந்து 3,28,000 அடிவரை அவர்கள் பறக்க இருக்கின்றனர்.

வரும் ஜுலை 20 ஆம் தேதி டெக்ஸாஸில் இருந்து விண்வெளிக்கு பயணம் செய்யும் இவர்கள், விண்வெளி சுற்றுலாவில் புது புரட்சியை ஏற்படுத்த உள்ளனர். இதைப்பார்த்து தான் பொறாமை படுவதாக சுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் விண்வெளியில் இருந்து பூமி எப்படி சுழல்கிறது என்பதை பார்க்க வேண்டும் என தனக்கு ஆசை இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.

6 பேர் பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள அந்த விண்கலத்தில் ஒரு இருக்கை ஏலம் விடப்பட்டு இருக்கிறது. இதுவரை 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்த இருக்கைக்கு ஏலம் கேட்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தவிர விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் வகையில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் பிரான்சன் என்பவர் விர்ஜின் கேலடிக்கின் எனும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி உள்ளார். அந்த நிறுவனத்தின் சோதனை ஓட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெற்றிகரமாக நிறைவேறியது. மேலும் அந்தக் குழுவில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சிரிஷா பாண்ட்லா என்பவரும் இடம்பெற்று இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos