close
Choose your channels

தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு அரசு முழு ஆதரவு… எடப்பாடி பழனிசாமி உறுதி!!!

Tuesday, December 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு அரசு முழு ஆதரவு… எடப்பாடி பழனிசாமி உறுதி!!!

 

கொரோனா காலத்தில் தமிழக அரசு அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக இருந்து வந்தது. இதனால் கொரோனா தாக்கத்தால் வீழ்ந்த பொருளாதாரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகத் திறமையாக முன்னேற்றம் அடைய செய்தார். இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற தொழில் வளர் தமிழ்நாடு வளர்ச்சிக்கான தொடக்க விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் இந்த அரசு முதலீட்டாளர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் நோக்கத்தோடு செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், புது முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் போன்ற நோக்கங்களுக்காக நடத்தப்பட்ட இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர், கொரோனா தொற்றுக் காலத்தில்கூட இந்தியாவிலேயே அதிக அளவில் புதிய முதலீடுகள், ஜிஎஸ்டி வரி வசூலில் தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி என தமிழக அரசு செய்து வரும் சாதனைகளால் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

கடந்த 2015 இல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, ரூ.2.42 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க 98 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் ஐந்தே ஆண்டுகளில் 72% திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் ரூ.74 ஆயிரம் கோடி முதலீடுகளும் 1.86 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2019 இல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது ரூ.3 லட்சத்து 501 கோடி முதலீட்டில் 304 ஒப்பந்தம் கையெழுத்தாகின. இவற்றில் ரூ.24 ஆயிரத்து 1.11 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதியளித்துள்ள 81 திட்டங்கள் ஒரே ஆண்டில் தமது வணிக உற்பத்தியை துவங்கி சாதனை படைத்து உள்ளன.

இதனால் கடந்த 22 மாதங்களில் மட்டும் ரூ.60 ஆயிரத்து 905 கோடி முதலீட்டில் 1.60 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் 120 புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன. இவற்றில் 10 ஒப்பந்தங்கள் செயல்பாட்டில் வந்துள்ளன. நடப்பாண்டில் மட்டும் ரூ.40 ஆயிரத்து 719 கோடி முதலீட்டில் 74 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் 55 புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன.

மேலும் ரூ.30 ஆயிரத்து 941 கோடி மதிப்பீட்டிலான 62 பெரும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. இன்று எனது முன்னிலையில் 24 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.24 ஆயிரத்து 458 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 54 ஆயிரத்து 218 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இன்று ஒரு தொழில் திட்டம் துவக்கப்பட்டு 5 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் சிறப்பான நிர்வாகத் திறனுக்கு மற்றொரு சான்றாக உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள், சிப்காட் தொழிற் பூங்காக்களில் உள்ள நிலங்களை தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இணைய வழியில் முப்பரிமாண அமைப்பில் பார்வையிடும் சிறப்பான வசதி, இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

இதன்மூலம் நிலத்தின் தன்மை, சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் விரிவாக ஆய்வு செய்து நிலத்திற்கான விண்ணப்பத்தையும் இணைய வழியிலேயே அனுப்பிட இயலும். தமிழக அரசு ஒவ்வொரு தொழில் முதலீட்டாளர்களுக்கும் முழுமையான வழிகாட்டுதலையும், ஆதரவையும் அளித்து உங்கள் அனைவரின் வெற்றிக்கும் உறுதுணையாக என்றென்றும் இருக்கும் என உறுதி கூறுகிறேன் இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.