அஜித், விஜய்க்கு கைதட்டுவதற்கு பதிலா இவங்களுக்கு கைதட்டுங்க: கவர்னர் பேச்சு

அஜித், விஜய்க்கு கை தட்டுவதற்கு பதிலாக இவர்களுக்கு கை தட்டுங்கள் என புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் ’மகாத்மா காந்தி’ என்ற கார்ட்டூன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ’மகாத்மா காந்தி’ படத்தின் குறுந்தகட்டை வெளியிட்ட புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியபோது, ‘நடிகர் அஜித்துக்கு கை தட்டுவதை விட அஹிம்சாவாதி காந்திக்கு கை தட்டுங்கள் என்றும் நடிகர் விஜய்க்கு கை தட்டுவதற்கு பதிலாக விடுதலை பெற்றுத்தந்த வ.உ.சிக்கு அதிகம் கைதட்ட வேண்டும் என்றும் கூறினார்.

அதற்காக அஜித், விஜய்க்கு கை தட்ட வேண்டாம் என்று தான் கூறவில்லை என்றும் அவர்களுக்கு கை தட்டுவதை விட அதிகமாக காந்திக்கும் வ.உ.சிக்கும் கைதட்டுங்கள் என்றுதான் நான் கூறுகிறேன் என்றும் அவர் கூறினார். இந்த விழாவில் நடிகர் ராஜேஷ் கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

More News

ஷாருக்கானின் அடுத்த படத்தில் இணையும் தமிழ் இசையமைப்பாளர்!

ஷாருக்கான் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் இல்லாமல் வெளியான தனுஷ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள்!

தனுஷ் நடித்த  திரைப்படத்தின் நான்கு பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ள நிலையில் அந்த நான்கு போஸ்டர்களிலும் தனுஷ் இல்லாமல் இருப்பது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது 

உன்னை சேர்த்து 25 கொலை: 'சாணிக்காகிதம்' டிரைலர்

இதுவரை 24 கொலை செய்து உள்ளேன் என்றும் உன்னை கொலை செய்வதை சேர்த்து 25 கொலை என்றும் கீர்த்தி சுரேஷ் பேசும் வசனத்துடன் கூடிய 'சாணிக்காகிதம்'  படத்தின் டிரைலர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'பீஸ்ட்' படம் பார்த்தவருக்கு கத்திக்குத்து, 'கேஜிஎஃப் 2' படம் பார்த்தவருக்கு துப்பாக்கி சூடு: பெரும் பரபரப்பு

 'பீஸ்ட்' படம் பார்த்தவருக்கு கத்திக்குத்தும்,  'கேஜிஎஃப் 2' படம் பார்த்தவருக்கு துப்பாக்கி சூடும் ஒரே நாளில் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே நாளில் அஜித், விஜய், சிம்பு படங்கள்: ரசிகர்கள் குஷி!

ஒரே நாளில் அஜீத், விஜய், சிம்பு நடித்த படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளதை அடுத்து ரசிகர்கள் குஷ்யாகியுள்ளனர்.