ஆணவ படுகொலையான நந்தீஷ் குடும்பத்திற்கு குவியும் உதவிகள்
- IndiaGlitz, [Wednesday,November 21 2018]
ஒசூர் அருகேயுள்ள சூடகொண்டப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த நந்தீஷ் - சுவாதி ஆகிய இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலுக்கு சுவாதி வீட்டில் எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் நந்தீஷ்-சுவாதி ஜோடி திடீரென வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து ஓசூர் அருகே தனியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி இருவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை குறித்த விசாரணையில் சுவாதியின் பெற்றோர்தான் இந்த கொலைக்கு காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து சுவாதியின் தந்தை உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
நந்தீஷ் மறைவால் அவரது குடும்பத்தினர் திக்கற்ற நிலையில் இருந்த நிலையில் அவரது குடும்பத்தினர்களுக்கு அரசு உதவி தேவை என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து நந்தீஷ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, 3 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்படும் என்றும், நந்தீஷ் பெற்றோருக்கு மாதம் ரூ.5000 ஓய்வூதியம், வீடு அல்லது நிலம் வழங்கப்படும் என்றும், நந்தீஷ் பெற்றோரை சந்தித்தபின் எஸ்.சி/எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் அறிவித்துள்ளார்.