close
Choose your channels

8 நிமிட சிங்கிள் ஷாட்: விஜய்சேதுபதியை பாராட்டிய பிரபல நடிகர்

Wednesday, November 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'சீதக்காதி' திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு வழக்கம்போல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் 8 நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டில் ஒரு காட்சி இருப்பதாக தான் கேள்விப்பட்டதாகவும், அந்த காட்சியை திரையில் பார்க்க தான் ஆர்வமாக காத்திருப்பதாகவும் நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். எட்டு நிமிடங்கள் ஒரே ஷாட்டில் நடிப்பது என்பது பிரமிக்கத்தக்க ஒரு பணி என்பதால் இந்த காட்சியை பார்க்க சூர்யாவை போலவே விஜய்சேதுபதியின் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, அர்ச்சனா, மகேந்திரன், மெளலி, பகவதி பெருமாள், ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை 'பாஷன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.