'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,March 16 2016]
பிரபல இசையமைப்பாளராகவும், வளர்ந்து வரும் கோலிவுட் நாயகனுமாகிய ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்துள்ள 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ள தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஜி.வி.பிரகாஷூடன் 'கயல்' ஆனந்தி, நிரோஷா, சரவணன், கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ள 'எனக்கு இன்னோரு பேர் இருக்கு' படத்தை 'டார்லிங்' பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். ரஜினியின் '2.0' படத்தை தயாரித்து வரும் லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மறுநாள் அதாவது மார்ச் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை உறுதி செய்வதற்காக இந்த படத்தின் புதிய விளம்பர போஸ்டர் ஒன்று சற்று முன்னர் சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

More News

இருமுகனில் ஒருமுகமாகும் கருணாகரன்

சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உளவுப்பிரிவு அதிகாரி மற்றும் திருநங்கை

தல அஜித்தின் 57வது படம் குறித்த முக்கிய தகவல்கள்

'தல அஜித் நடித்த 'வேதாளம் திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில்...

'கருடா''வுக்கு வில்லனாகும் 'ஆரம்பம்' நடிகர்

அரிமாநம்பி' ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை...

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ அட்டை வழங்கும் விழா

ஏ.சி.எஸ். மருத்துவமனையும் நடிகர் சங்கமும் இணைந்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

''இது நம்ம ஆளு' பாடலில் தேசிய விருது பெற்ற கலைஞர் பங்கேற்பு

பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடித்த 'இது நம்ம ஆளு' படத்தில் இடம்பெற்ற 'மாமன் வெயிட்டிங் என்ற ஒரே ஒரு பாடல் மட்டுமே...