close
Choose your channels

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் குறித்த முக்கிய தகவல்

Wednesday, March 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளராகவும், வளர்ந்து வரும் கோலிவுட் நாயகனுமாகிய ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்துள்ள 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ள தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஜி.வி.பிரகாஷூடன் 'கயல்' ஆனந்தி, நிரோஷா, சரவணன், கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ள 'எனக்கு இன்னோரு பேர் இருக்கு' படத்தை 'டார்லிங்' பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். ரஜினியின் '2.0' படத்தை தயாரித்து வரும் லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மறுநாள் அதாவது மார்ச் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை உறுதி செய்வதற்காக இந்த படத்தின் புதிய விளம்பர போஸ்டர் ஒன்று சற்று முன்னர் சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.