ஃபர்ஸ்ட் ஆப் மட்டும் தான் ரசிகர்களுக்கு .. 'துணிவு' பட ரகசியத்தை கூறிய எச்.வினோத்


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த படத்தை மிக ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் எச் வினோத் அளித்த பேட்டியில் ‘துணிவு’ திரைப்படம் முழுவதும் வங்கி கொள்ளை படம் கிடையாது என்றும் அது படத்தில் ஒரு சிறிய பகுதிதான் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் முதல் பாதி அஜித் ரசிகர்களுகாகவே உருவாக்கப்பட்டது, ஆனால் இரண்டாம் பாதி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இருக்கும், சிறந்த பொழுதுபோக்கு படமாக இந்தப் படம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 11ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு இந்த படத்தின் முதல் காட்சி திரையிடவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments