ஷாலினி அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Friday,November 20 2015]

தல' என்று அனைவராலும் அழைக்கப்படும் அஜித்தின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினி அஜித்துக்கு இன்று பிறந்த நாள். இன்றைய நாள் அவருக்கு இனிமையான நாளாக அமைய நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

கடந்த 1983ஆம் ஆண்டு முதல் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஷாலினி, தமிழில் சிவாஜிகணேசன் நடித்த 'பந்தம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் பிள்ளை நிலா, விடுதலை, நிலவே மலரே, சங்கர் குரு உள்பட பல படங்களில் நடித்த ஷாலினி, பின்னர் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான 'காதலுக்கு மரியாதை' படத்தின் மூலம் நாயகியாக கடந்த 1997ஆம் ஆண்டு ரீ-எண்ட்ரி ஆனார்.

இதன்பின்னர் அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களில் ஷாலினி நடித்தார். இதில் அமர்க்களம் படத்தில் நடித்தபோது நடிகர் அஜீத்துடன் காதல் வயப்பட்டு பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார். அஜித்-ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஷாலினி அஜித்துக்கு மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

More News

பரதனை விஜய் தேர்வு செய்தது ஏன்?

விஜய் நடிக்கவுள்ள 60வது படத்தின் இயக்குனர் 'பரதன்' என்று தகவல் நேற்று வெளியானது என்பதை அனைவரும் அறிவோம்...

கமல்-ஸ்ரீதேவியின் காவிய திரைப்படம் ரீமேக் ஆகிறதா?

உலக நாயகன் கமல்ஹாசன், மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இருவருக்குமே மறக்க முடியாத ஒரு படம் 'மூன்றாம் பிறை..

பாலாவின் 5 ஹீரோக்கள் படத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நாயகி?

இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கும் நிலையில்...

மாதவனின் 'இறுதிச்சுற்று' ரிலீஸ் தேதி

ஆர்யா, கிருஷ்ணா நடித்த 'யட்சன்' படத்தை தயாரித்த யூடிவி நிறுவனம், சில காலம் தயாரிப்பு மற்றும் விநியோகம்...

விஜய் 60' படத்தின் இசையமைப்பாளர் யார்?

இளையதளபதி விஜய் நடித்துவரும் 'விஜய் 59' படத்தின் டைட்டிலே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அவர் நடிக்கவுள்ள 60வது படத்தின் தகவல்கள் விறுவிறுப்பாக வெளியாகி வருகின்றது...