close
Choose your channels

பாலாவின் 5 ஹீரோக்கள் படத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நாயகி?

Thursday, November 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆர்யா, விஷால், அதர்வா, அரவிந்தசாமி மற்றும் ராணா ஆகிய ஐந்து ஹீரோக்களுடன் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார் என்ற செய்தியை பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ஹீரோயின் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் முக்கியமான, போல்டான ஹீரோயின் கேரக்டருக்கு இயக்குனர் பாலா, தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை அனுஷ்கா ஷெட்டியை அணுகியதாகவும், பாலாவின் படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது கால்ஷீட் தேதிகள் மற்றும் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அனுஷ்கா இந்த படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் ஐந்து முன்னணி ஹீரோக்கள் இருக்கும்போது தற்போது அனுஷ்காவும் இணையவுள்ளதாக வந்த செய்தி, இந்த படத்தின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. பாரதிராஜா இயக்கவுள்ளதாக இருந்த 'குற்றப்பரம்பரை' நாவலை அடிப்படையாக கொண்டு பாலா இந்த படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பாலா தனது அனைத்து படங்களிலும் ஹீரோ மற்றும் ஹீரோயின்களை வித்தியாசமான கெட்டப்பில் காண்பித்து வரும் நிலையில் அனுஷ்காவுக்கு என்ன கெட்டப்பை அவர் யோசித்து வைத்திருப்பார் என்பதை அறிய கோலிவுட் ஆவலாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.