சிரிப்பழகி சினேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Thursday,October 12 2017]

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவுக்கு பின்னர் சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஒரே நடிகையான சினேகா இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு IndiaGlitz  தனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

என்னவளே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சினேகா அதன் பின்னர் 'ஆனந்தம்', 'புன்னகை தேசம்', 'உன்னை நினைத்து', 'ஏப்ரல் மாதத்தில்', 'பார்த்திபன் கனவு' போன்ற பல வெற்றி படங்களில் நடித்து கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டார்.

கமல்ஹாசனுடன் 'பம்மல் கே.சம்மந்தம்', 'வசூல்ராஜா எம்பிபிஎஸ், அஜித்துடன் ஜனா, விஜய்யுடன் 'வசீகரா, என முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர். 

அதேபோல் சேரனின் 'ஆட்டோகிராப், கரு.பழனியப்பனின் 'பிரிவோம் சந்திப்போம், பார்த்திபன் கனவு', தனுஷின் 'புதுப்பேட்டை', தங்கர்பச்சானின் 'பள்ளிக்கூடம்' ஆகிய படங்கள் சினேகாவின் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய படங்கள் ஆகும். 

அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடித்தபோது அந்த படத்தின் நாயகன் பிரசன்னா மீது காதல் கொண்டு பின்னர் அவரை 2012ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

திருமணத்திற்கு பின்னரும் ஒருசில படங்களில் நடித்து வரும் சினேகா, சிவகார்த்திகேயன் - நயன்தாராவின் 'வேலைக்காரன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதேபோல் இன்னும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து புகழுடன் வாழ இந்த இனிய பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை சிரிப்பழகி சினேகாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

More News

மெர்சல் கதை இதுதானா? இணையத்தில் பரவும் வதந்தி

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் வரும் 18ஆம் தேதி தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

மூன்றாம் பிறை ரீமேக்: வித்யாபாலன் கூறிய வித்தியாசமான பதில்

கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய படம் 'மூன்றாம் பிறை'. கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருதும்,

சிம்பு-தனுஷ் நாயகிக்கு புதிய பதவி கொடுத்த ராகுல்காந்தி

நடிகர் சிம்புவுடன் 'குத்து' மற்றும் தனுஷுடன் 'பொல்லாதவன் உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும், கன்னட, தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ரம்யா.

சியான் விக்ரமின் 'ஸ்கெட்ச்' ரிலீஸ் எப்போது?

சியான் விக்ரம், தமன்னா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கி வரும் 'ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. 

ஒரு தளபதி உருவாக எத்தனை வருசம்? பிரபல கவிஞரின் மகன்

'ஒரு குழந்தை உருவாகறதுக்கு பத்து மாதம், ஒரு பட்டதாரி உருவாகறதுக்கு மூணு வருஷம், ஆனால் ஒரு தலைவன் உருவாகறதுக்கு ஒரு யுகமே தேவைப்படுது'