close
Choose your channels

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரட்சி தளபதி விஷால்!

Sunday, August 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்தவர் நடிகர் விஷால். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு ’செல்லமே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, தோரணை, அவன் இவன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், உள்பட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ‘எனிமி’, ‘துப்பரிவாளன் 2’ மற்றும் ’வீரமே வாகை சூடும்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த மூன்று திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

நடிகர் விஷால் நடிகர் சங்க செயலாளராக பதவியில் இருந்தபோதுதான் நடிகர் சங்க கட்டடம் கட்டும் முயற்சி எடுக்கப்பட்டது என்பதும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது தான் ஆன்லைன் ஃபைரஸியை எதிர்த்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் விஷால் இன்னும் பல வெற்றிகளை குவித்து தமிழ் திரையுலகில் பல்வேறு சாதனைகள் செய்ய இந்த இனிய நாளில் வாழ்த்துவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment