'சி3' தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,February 02 2017]

சூர்யா நடித்துள்ள 'சி3' படம் வரும் 9ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமனான ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் நேற்று புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி இதே தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் இன்னொரு படமான 'ஹர ஹர மஹாதேவகி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் சிங்கிள் டிராக் ஆகியவை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, மொட்டை ராஜேந்திரன், சதீஷ், கருணாகரன், பாலா சரவணன், ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சந்தோஷ் ஜெயகுமார் இயக்கி வருகிறார். பாலமுரளி பாபு இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'சி3', 'ஹர ஹர மஹாதேவகி' படங்கள் தவிர ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கனடாவில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை துவக்கி வைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. இசை மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு ஆகியவற்றிலும் அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்...

அஜித்தை அட்டகாசமாக மாற்றிய ஃபிட்னெஸ் பயிற்சியாளர் யார் தெரியுமா?

அஜித் நடித்த 'வேதாளம்' படப்பிடிப்பின் கடைசி நாளில் அவருக்கு காலில் அடிபட்டதால் அந்த வலியோடு அந்த படப்பிடிப்பை முடித்து கொடுத்தார். அதன் பின்னர் அறுவை சிகிச்சை செய்து சில மாதங்கள் முழு ஓய்வில் இருந்த அஜித்தின் உடல் எடையும் கொஞ்சம் அதிகரித்திருந்தது...

'அஜித் 57' படத்தின் அட்டகாசமான டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்

அஜித் நடித்து வரும் 57வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் எப்படி இருக்கும், டைட்டில் என்னவாக இருக்கும் என்று கோடிக்கணக்கான அஜித் ரசிகர்கள் எந்தவித தகவலும் தெரியாமல் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஃபர்ஸ்ட்லுக் வெளிவருவதற்கு சில மணி நேரம் முன்பே அஜித் வெற்று உடம்புடன

ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்து செல்லும் அஜித்தின் ஃபர்ஸ்ட்லுக்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் 'அஜித் 57' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்னும் ஒருசில மணி நேரங்களில் வெளியாகவுள்ள நிலையில் இந்த ஃபர்ஸ்ட்லுக் குறித்த அட்வான்ஸ் தகவல்களை தற்போது தருகிறோம்.

வாழ்க்கையில் முதல்முறையாக தவறு செய்தேன். ஹன்சிகாவின் 'போகன்' அனுபவம்

'தனி ஒருவன்' என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பின்னர் மீண்டும் ஜெயம் ரவி, அரவிந்தசாமி இணைந்து நடித்துள்ள 'போகன்' திரைப்படம் நாளை வெளிவரவுள்ளது. இந்த படத்தின் நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார்...