close
Choose your channels

'சி3' தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அதிரடி அறிவிப்பு

Thursday, February 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்துள்ள 'சி3' படம் வரும் 9ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமனான ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் நேற்று புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி இதே தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் இன்னொரு படமான 'ஹர ஹர மஹாதேவகி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் சிங்கிள் டிராக் ஆகியவை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, மொட்டை ராஜேந்திரன், சதீஷ், கருணாகரன், பாலா சரவணன், ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சந்தோஷ் ஜெயகுமார் இயக்கி வருகிறார். பாலமுரளி பாபு இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'சி3', 'ஹர ஹர மஹாதேவகி' படங்கள் தவிர ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.