நேசமணி மட்டும் மஞ்சள் டர்பனை அணிந்திருந்தால்... ஹர்பஜன்சிங் டுவீட்

  • IndiaGlitz, [Thursday,May 30 2019]

ஒரு சிவில் இஞ்சினியர் தனது டுவிட்டர் பக்கத்தில் விளையாட்டாக ஆரம்பித்து வைத்த 'நேசமணி' டிரண்ட் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. நெட்டிசன்கள் தங்கள் கற்பனைத்திறனை வைத்து நூற்றுக்கணக்கான நேசமணி மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். வடிவேலுவின் கேரக்டரான நேசமணியும் அவர் மீது விழுந்த சுத்தியலும் உலக அளவில் புகழ் பெற்று வருகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளின்போது தமிழில் டுவீட் போட்டு தமிழர்களின் ஆதரவை பெற்று வந்த ஹர்பஜன்சிங்கையும் இந்த நேசமணி விட்டுவைக்கவில்லை. இதுகுறித்து அவர் பதிவு செய்த டுவீட்டில் கூறியிருப்பதாவது:

என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani என்று பதிவு செய்து வடிவேலு மஞ்சள் நிற டர்பன் கட்டிய ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த நேசமணி விவகாரம் எங்கு போய் முடிய போகிறதோ தெரியவில்லை

 

More News

உலக அளவில் வைரலாகிய நேசமணி: யாருப்பா இவர்?

சமூக வலைத்தளங்களில் ஒரு விஷயத்தை உலக அளவில் வைரலாக்குவதில் தமிழர்களுக்கு இணை யாருமே கிடையாது. சினிமா நட்சத்திரங்களின் திரைப்படங்கள் முதல் 'கோபேக் மோடி'

4 வருடங்களுக்கு முன் இதே நாளில்.. சூர்யாவுடன் மோதிய சாய்பல்லவி!

சூர்யா, சாய்பல்லவி முதல்முறையாக இணைந்து நடித்த 'என்.ஜி.கே' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

சுழட்டி அடித்த ஸ்டண்ட் நடிகருக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி!

தமிழ் சினிமாவில் தைரியமான கேரக்டர்களில் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி. தனது கேரக்டருக்காக எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கும்

ஐ.ஆர்.சி.டி.சியில் புகார் அளித்து அவமானப்பட்ட வாடிக்கையாளர்!

ரயில்களில் முன்பதிவு செய்ய ரயில்வே துறை தொடங்கியுள்ள இணையதளம் தான் ஐ.ஆர்.சி.டி.சி. இந்த இணையதளத்தில் சமீபகாலமாக கூகுள் விளம்பரங்கள் வருகின்றன.

அடுத்த தலைமுறைக்கு செல்லும் நெல் ஜெயராமனின் புகழ்!

இயற்கை விவசாயம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட செய்ததில் பெரும்பங்கு நெல் ஜெயராமன் அவர்களுக்கு உண்டு