close
Choose your channels

உலக அளவில் வைரலாகிய நேசமணி: யாருப்பா இவர்?

Thursday, May 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமூக வலைத்தளங்களில் ஒரு விஷயத்தை உலக அளவில் வைரலாக்குவதில் தமிழர்களுக்கு இணை யாருமே கிடையாது. சினிமா நட்சத்திரங்களின் திரைப்படங்கள் முதல் 'கோபேக் மோடி' வரை இதுவரை பல விஷயங்களை டிரெண்டுக்கு கொண்டு வந்த நெட்டிசன்கள் நேற்று முதல் 'நேசமணி'யை வைரலாக்கி வருகின்றனர். யாருப்பா இந்த நேசமணி? என்று தமிழ் தெரியாத மற்ற மொழி நெட்டிசன்கள் மண்டையை பிய்த்து கொள்கின்றனர்.

விஜய், சூர்யா நடித்த 'பிரெண்ட்ஸ்' படத்தில் காண்ட்ராக்டர் கேரக்டரில் நடித்த வடிவேலுவின் கேரக்டர் பெயர்தான் இந்த நேசமணி. இந்த நேசமணி கேரக்டரைத்தான் திடீரென உலக அளவில் நம் நெட்டிசன்கள் டிரெண்ட் ஆக்கியுள்ளனர்.

#Pray_for_Neasamani' என்ற பெயரில் டிரெண்டாகி வரும் இந்த ஹேஷ்டேக் முதலில் சிவில் சிவில் இன்ஜினியரிங் லேனர்ஸ் என்ற டுவிட்டர் பக்கத்தில் சுத்தியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒரு நெட்டிசன், அது நேசமணி தலையில் விழுந்தது என குறும்பாக பதிலளித்தார். இந்த பதில்தான் தற்போது 'நேசமணி' என்ற டிரெண்டுக்கு காரணம்

இந்த டிரெண்டின் கதாநாயகன் வடிவேலுதான். அவர் சினிமாவில் நடித்து கொண்டிருந்தாலும், நடிக்காவிட்டாலும் அவர் குறித்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பதிவாகாத நாளே இல்லை என்பதுதான் உண்மை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.