'சிங்கம் 4' படம் குறித்து ஏமாற்றமான செய்தி சொன்ன ஹரி.. ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட்..!

  • IndiaGlitz, [Saturday,April 13 2024]

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவான ’சிங்கம்’ படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அடுத்தடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் வெளியாகி மூன்று பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ’சிங்கம்’ படத்தில் நான்காம் பாகம் உருவாக்க வேண்டும் என சூர்யா ரசிகர்கள் இயக்குனர் ஹரியிடம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இது குறித்து ஏற்கனவே அவர் பலமுறை பேட்டி அளித்துள்ளார். ’சிங்கம்’ நான்காம் பாகம் உருவாகுமா என்று எனக்கே தெரியாது, அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறிய நிலையில் தற்போது நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

’சிங்கம்’ படத்தின் நான்காம் பாகம் என்பது அந்த படங்களின் தொடர்ச்சியான கதை கிடைத்தால் மட்டுமே செய்வேன், டைட்டிலை மட்டும் பயன்படுத்திக் கொண்டு வேறு கதையை உருவாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று இயக்குனர் ஹரி தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட்டில் மூன்று பந்தில் மூன்று விக்கெட் எடுத்தால் ஹாட்ரிக் என்று சொல்வார்கள், ஆனால் நான்காவது விக்கெட் எடுத்தால் அதற்கு பெயர் இல்லை, அதேபோல் நான்காம் பாகம் உருவாக்குவதில் எனக்கு பெரிய ஆர்வம் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் இன்னொரு போலீஸ் படம் உருவாக்க திட்டமிட்டு உள்ளேன் என்றும் விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று ட்விஸ்ட் கொடுத்தார். எனவே ’சிங்கம் 4’ படம் குறித்த ஏமாற்றமான தகவல்களை இயக்குனர் ஹரி தெரிவித்தாலும் மீண்டும் ஒரு விறுவிறுப்பான போலீஸ் படம் கொடுப்பேன் என்று ஹரி கூறியிருப்பதால் அந்த படம் என்ன என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

உறுதியாகிவிட்டதா 'ஜெயிலர் 2' படம்? டைட்டில் நியூஸ் எல்லாம் வந்துருச்சே..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்

'தக்லைஃப்' படத்திற்காக கெட்டப்பை மாறுகிறாரா சிம்பு? அப்ப 'எஸ்டிஆர் 48' என்ன ஆச்சு?

சிம்பு நடிப்பில், உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர் 48' என்ற படம் உருவாக

'தளபதி 69' தயாரிப்பாளர் தகவலில் திடீர் திருப்பம்.. தனுஷுக்கு பதில் விஜய்யா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 69' திரைப்படத்தை 'பாகுபலி' பட நிறுவனமான டிவிவி என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீரென அந்நிறுவனம்

ரிலீசுக்கு முன்பே தமன்னா - ராஷி கண்ணா டான்ஸ் வீடியோ.. 'அரண்மனை 4' படத்தின் அசத்தல் அறிவிப்பு..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரண்மனை 4' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் இயக்குனர்களை குறி வைக்கும் சிவகார்த்திகேயன்.. ஏ.ஆர்முருகதாஸை அடுத்து இவர்தான்..!

தளபதி விஜய் விரைவில் திரை உலகை விட்டு விலகப் போகிறார் என்று செய்தி வந்தவுடன் அடுத்த தளபதி யார் என்ற போட்டி திரையுலகில் இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன்