ஹரிஷ் கல்யாண் - 'அட்டக்கத்தி' தினேஷ் படம்.. டைட்டில் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,March 03 2023]

 

ஹரிஷ் கல்யாண் மற்றும் ‘அட்டக்கத்தி’ தினேஷ் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பிரின்ஸ் பிக்சர்ஸ் என்பதும் இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ‘அட்டக்கத்தி’ தினேஷ் ஆகியோர் நடித்து வருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’லப்பர் பந்து’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது, தமிழரசன் பச்சை முத்து என்பவர் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த முக்கிய அப்டேட்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 

More News

லெஜண்ட் சரவணன் படத்தின் அதிரடி அறிவிப்பு.. இன்றே ஸ்பெஷல் விருந்து..!

 சரவணா ஸ்டோர் அண்ணாச்சி லெஜண்ட் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது என்றும் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பது தெரிந்ததே.

'இயற்கை' படத்தில் அறிமுகம், முதலமைச்சருடன் திருமணம்.. குட்டி ராதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

'இயற்கை' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை குட்டி ராதிகா முன்னாள் கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்ட நிலையில்

கணவரை 'சார்' என்று அழைத்த பிரபல பாடகி.. வைரல் வீடியோ..!

தமிழ் திரை உலகின் பிரபல பாடகி ஒருவர் தனது கணவரை விருது வழங்கும் விழாவின் மேடையில் 'சார்' என்று அழைத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

மதுரை முத்து பாடி பார்த்துருக்கிங்களா? இதோ பாருங்க..!

மதுரை முத்து காமெடி என்றாலே வித்தியாசமாக இருக்கும் என்றும் அவரது காமெடிக்கு சிரிக்காத நபர்களே இல்லை என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் மதுரை முத்து ஒரு இசைக்குழுவில் பாடிய வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடரும் அழகான நட்பு..!

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆறு சீசன்களாக ஒளிபரப்பாகி உள்ளது என்பதும் இந்த ஆறு சீசன்களின் போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும்போது ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை