close
Choose your channels

மதுரை முத்து பாடி பார்த்துருக்கிங்களா? இதோ பாருங்க..!

Friday, March 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மதுரை முத்து காமெடி என்றாலே வித்தியாசமாக இருக்கும் என்றும் அவரது காமெடிக்கு சிரிக்காத நபர்களே இல்லை என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் மதுரை முத்து ஒரு இசைக்குழுவில் பாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மதுரையை சேர்ந்த மதுரை முத்து ஒரு மேடை பேச்சாளர் என்பதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர் என்பதும் தெரிந்தது. சன் டிவியில் ஒளிபரப்பான ’அசத்தப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் மட்டும் இன்றி உலகம் முழுவதும் பிரபலமானார்.

மேலும் ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பதும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் இவரது காமெடி ஒரு வித்தியாசமாக இருக்கும் என்பதால் அவரது காமெடிக்கு பல வருடங்களாக ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருக்கிறார் என்பதும் பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுரை முத்து யாழ் இசை குழுவில் பாடகர் ஆக மாறி ஒரு பாடலை பாடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகிவிடுகிறது.

பிரபல பாடகர் வேல்முருகனுடன் இணைந்து மதுரை முத்து பாடிய வீடியோவை பார்த்து பல ரசிகர்கள் மதுரை முத்துவுக்கு காமெடி செய்யத்தான் தெரியும், பாடவும் தெரியுமா என ஆச்சரியமாக கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.