சென்னைக்கும் இன்னும் கனமழை காத்திருக்கு: வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்!

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டு உள்ளதால் வட மாவட்டங்களில் வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சென்னைக்கு மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் வட தமிழகத்தில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் சென்னையில் மேலும் அதிகனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழகக் கடற்கரையின் தெற்கு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் நவம்பர் 9ஆம் தேதி முதல் அதாவது நாளை மறுநாள் முதல் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதன் பின்னர் வலுப்பெற்று வடக்கு கடற்கரை நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையை பொருத்தவரை அடுத்த சில மணி நேரத்தில் கன மழையும் சில இடங்களில் அதிக கனமழையும் பெய்யும் என்றும் வானிலை மைய துணை இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

More News

முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவர்: முக ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்

முதல்வர்களில் நீங்கள்தான் முன்னுதாரணமாக திகழ்கிறீர்கள் என உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்

க்யூட் சிஸ்டர்ஸ்… பேபி ஷாலினி- ஷாமிலி அழகிய புகைப்படம் வைரல்!

தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர்

ஸ்கூட்டரை போனஸாக வழங்கிய நிறுவனம்… ஆடிப்போன ஊழியர்கள்!

சூரத்தில் செயல்பட்டுவரும் நிறுவனம் ஒன்று தங்களுடைய ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தீபாவளி போனஸாக கொடுத்து அசத்தியிருக்கிறது

கொரோனா வார்டில் தீ விபத்து… 10 பேர் உடல்கருகி உயிரிழந்த அவலம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது

கொரோனாவை தடுக்கும் மாத்திரைகள்… விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

கொரோனா சிகிச்சைக்கு உரிய மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில்