நீதிபதி கர்ணனுக்கு மனநல பாதிப்பா? மருத்துவர்கள் சோதனை

  • IndiaGlitz, [Thursday,May 04 2017]

கடந்த சில வாரங்களாக அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியில் இடம்பெற்று வருபவர் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணன். நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதால் சுப்ரீம் கோர்ட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகிய நீதிபதி கர்ணன், சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்பட 7 நீதிபதிகள் கொல்கத்தா ஐகோர்ட்டில் ஏப்ரல் 28ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனால் 7 நீதிபதிகளும் ஆஜர் ஆகாததால், 7 நீதிபதிகளுக்கும் ஜாமினில் வெளிவர முடியாத பிடியாணையை பிறப்பித்தார். நீதிபதி கர்ணனின் இந்த நடவடிக்கையை அடுத்து அவருக்கு மனநல பரிசோதனை செய்ய கடந்த 1ம்தேதி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த சோதனையின் முடிவை வரும் 8ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் சற்று முன்னர் மனநல மருத்துவர்கள் நீதிபதி கர்ணனுக்கு கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் மனநல மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

முன்னதாக இந்த மனநல சோதனைக்கு தான் சம்மதிக்க மாட்டேன் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேருக்குத்தான் மன நல பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கர்ணன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பாகுபலி 2' படத்தின் 6 நாள் பிரமாண்ட வசூல் நிலவரம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் செய்ததோடு, வசூலிலும் புதிய சாதனன படைத்து வருகிறது.

லண்டனில் வாள்வீச்சு பயிற்சி பெரும் பிரபல நடிகை

இந்தியாவின் பிரமாண்டமான படமான 'பாகுபலி 2' படத்தின் வெற்றியை அடுத்து தயாரிப்பாளர்கள் துணிச்சலாக பெரிய பட்ஜெட் படத்தை தயாரிக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் சாலையில் பாகிஸ்தான் கொடி. போலீசார் விசாரணை

சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இரண்டு இந்திய ராணுவர்களை கொலை செய்ததோடு அவர்களின் உடல்களையும் சிதைத்த கொடூரமான சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் பாகிஸ்தான் ராணுவத்தினர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்...

'என்றென்றும் புன்னகையுடன் த்ரிஷா. பிறந்த நாள் சிறப்பு கட்டுரை

கோலிவுட் திரையுலகில் ஒரு நடிகை ஐந்து முதல் பத்து படங்களுக்கு நாயகியாக தாக்கு பிடிப்பதே பெரிய விஷயம் இந்த நிலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள், தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக வலம் வருவதோடு, இன்றைய முன்னணி நாயகிகளுக்கு இணையாக கைவசம் படங்கள் வைத்திருக்கும் பிசியான நடிகை த்ரிஷா.

தற்கொலை செய்து கொள்ள தயார்! 'வாணி ராணி' நடிகை சபிதா சபதம்

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 'வாணி ராணி' தொடரில் நடித்த நடிகை சபீதா, அந்த தொடரின் மேலாளருடன் நடுரோட்டில் சண்டை போட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் நடிகை சபீதா, மேலாளருடன் முறையற்ற உறவு வைத்திருந்ததாக பல இணையதளங்களும், சமூக இணையதளங்களும் செய்தி வெளியிட்டன...