ஹலோ.. செக்.. செக்.. விஜய் ஆண்டனியின் 'ஹிட்லர்' டீசர்..!

  • IndiaGlitz, [Tuesday,December 26 2023]

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘ஹிட்லர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் ஆண்டனி, கௌதம் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, தமிழ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஹிட்லர் திரைப்படத்தை தனா இயக்கியுள்ளார்.

விவேக் மெர்வின் இசையில் நவீன் குமார் ஒளிப்பதிவில் சங்கத்தமிழன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தின் டீசரில் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் காட்சிகள் இருப்பதை அடுத்து ஆக்ஷன் பிரியர்களுக்கு இந்த படம் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் சரண்ராஜ் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பது, வழக்கம்போல் கெளதம் மேனன் அசத்தலான நடிப்பு, விஜய் ஆண்டனியின் வித்தியாசமான கெட்டப் ஆகியவை இந்த படத்தின் பாசிட்டிவ்களாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் பின்னணி இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு ஆகியவையும் அசத்தலாக உள்ளது. மொத்தத்தில் விஜய் ஆண்டனிக்கு மற்றும் ஒரு ஹிட் படம் ‘ஹிட்லர்’ என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

தம்பி நிக்ஸனுடன் நெருக்கமாக நடனம் பழகும் பூர்ணிமா..!

தம்பி நிக்ஸனுடன் நெருக்கமாக நடனம் பழகும் பூர்ணிமா..!பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னும் இரண்டு

ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லி கொடுத்த முதலமைச்சர்.. முதல் பந்திலேயே சிக்சர்...!

நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவுக்கு அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

இளைஞர்களாக மாறிய சிம்ரனின் சிங்கக்குட்டிகள்.. வைரல் குடும்ப புகைப்படம்..!

நடிகை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில்

அதுக்கு பேரு Micro Stamping.. விசித்ரா குறித்து கூறியது இந்த ஒருவரை தவிர யாராக இருக்கும்?

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் ஃபினாலே நடைபெற்று வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும்  போட்டியாளர் யார் என்பதை அறிய பார்வையாளர்கள் மிகவும்

இளம்பெண்ணுடன் நியூயார்க்கில் விஷால்.. கேமராவை பார்த்ததும் முகத்தை மூடி ஓடியதால் பரபரப்பு..!

நடிகர் விஷால் நியூயார்க் சாலையில் இளம் பெண் ஒருவருடன் சென்று கொண்டிருக்கும் போது அவரை ஒருவர் வீடியோ எடுத்ததால் உடனே அவர் முகத்தை மூடிக் கொண்டு ஓடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.