close
Choose your channels

ஹலோ.. செக்.. செக்.. விஜய் ஆண்டனியின் 'ஹிட்லர்' டீசர்..!

Tuesday, December 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘ஹிட்லர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் ஆண்டனி, கௌதம் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, தமிழ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஹிட்லர் திரைப்படத்தை தனா இயக்கியுள்ளார்.

விவேக் மெர்வின் இசையில் நவீன் குமார் ஒளிப்பதிவில் சங்கத்தமிழன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தின் டீசரில் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் காட்சிகள் இருப்பதை அடுத்து ஆக்ஷன் பிரியர்களுக்கு இந்த படம் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் சரண்ராஜ் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பது, வழக்கம்போல் கெளதம் மேனன் அசத்தலான நடிப்பு, விஜய் ஆண்டனியின் வித்தியாசமான கெட்டப் ஆகியவை இந்த படத்தின் பாசிட்டிவ்களாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் பின்னணி இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு ஆகியவையும் அசத்தலாக உள்ளது. மொத்தத்தில் விஜய் ஆண்டனிக்கு மற்றும் ஒரு ஹிட் படம் ‘ஹிட்லர்’ என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.