close
Choose your channels

நயன்தாராவும் சமந்தாவும் சொல்லி வச்சு செஞ்சாங்களா.. ஒரே மாதிரி இருக்குதே..!

Friday, April 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் ஹாலிவுட் நடிகைகள் போல் காஸ்ட்யூம் அணிந்து பிளாக் அண்ட் ஒயிட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் சொல்லி வைத்தால் போல் இருவரும் சேர்ந்து புகைப்படங்களை பதிவு செய்தார்களா என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது..

நயன்தாரா, சமந்தா ஆகிய இருவருமே தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் திருமணத்திற்கு பின்னும் அதிக படங்களில் நடித்து வருகிறார்கள் என்பதும் இன்னும் அவர்கள் பிஸியாக தான் இருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நயன்தாரா, சமந்தா இருவரும் இன்ஸ்டாகிராமிலும் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது பதிவு செய்யும் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் நயன்தாரா, சமந்தா இருவரும் ஹாலிவுட் ஸ்டைலில் காஸ்ட்யூம் அணிந்து போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் ஒரே நேரத்தில் இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காஸ்ட்யூம் அணிந்து பிளாக் அண்ட் ஒயிட்டில் புகைப்படங்களை பதிவு செய்திருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருவரும் சொல்லி வைத்து கொண்டு செய்தார்களா? அல்லது தற்செயலாக இது நிகழ்ந்ததா? என்று தெரியவில்லை என்றாலும் ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.