இந்தியா முழுவதும் ஆணுறை விற்பனை அதிகரிப்பு: மருந்து கடைக்காரர்கள் ஆச்சரியம்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் வேலையின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் வீட்டிலேயே முடங்கி இருப்பதை அடுத்து ஆணுறை விற்பனை திடீரென அதிகரித்துள்ளதாக மருந்து கடைக்காரர்கள் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இந்தியா முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் அத்தியாவசிய தேவையான மருந்து பொருட்களை வாங்குவதற்காக மருந்து கடைகள் திறந்திருக்கும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் மாஸ்க்குகள்,சானிடைசர்கள், கையுறைகள் ஆகியவை அதிக அளவில் விற்பனையாகும் என்ற நோக்கத்தில் மருந்து கடைக்காரர்கள் அதனை அதிக அளவில் ஸ்டாக் வைத்திருந்தார்கள்.

ஆனால் மருந்து கடைக்காரர்களே எதிர்பாராத வகையில் இந்தியாவிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் ஆணுறைகள் அதிகம் விற்பனையானதால் கடைக்காரர்களை ஆச்சரியம் அடைந்துள்ளனர். எந்த வேலையும் இன்றி வீட்டில் இருப்பவர்கள் அல்லது வீட்டில் இருந்தே பணி செய்பவர்கள் அதிகம் ஆணுறைகளை வாங்கி செல்வதாகவும், ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஆணுறைகளை அதிகம் வாங்கி செல்வதாகவும் மருந்து கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்

அதேபோல் சாதாரண நாட்களில் ஆணுறைகள் சிறிய பேக் மட்டுமே விற்பனை ஆகும் என்றும் ஆனால் தற்போது அதிக ஆணுறைகள் கொண்ட பெரிய பேக்குகள் விற்பனையாகி வருவதாகவும் மக்கள் கடைக்காரர்கள் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை அளித்து வருகிறது. இதனை அடுத்து மாஸ்க்குகள், சானிடைசர் போலவே ஆணுறைகளையும் கடைக்காரர்கள் அதிகம் ஸ்டாக் வைக்க தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆணுறைகள் மட்டுமன்றி கருத்தடை மாத்திரைகளும் அதிக அளவில் விற்பனையாகி வருவதாக கடைக்காரர்கள் தகவல்களை அளித்துள்ளனர்.

More News

குஜராத்தில் அடுத்தடுத்த நாட்களில் இருவர் மரணம்: பெரும் பரபரப்பு

குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில் 85 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனாவை ஒழிக்க உதவிய தல அஜித்!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Work from Home??? வீட்டில் இருந்தபடி சிறப்பாக பணியாற்றுவது எப்படி???

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாங்களும் மனுஷங்க தான்: எங்களையும் கொஞ்சம் பாராட்டுங்க: தூய்மை பணியாளர்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி, மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் அந்த வைரஸை எதிர்த்துப் இரவு பகலாக போராடிவரும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும்

கொரோனா வைரசுக்கு தமிழகத்தில் மேலும் ஒரு பலி: குவைத்தில் இருந்து திரும்பியவர்

கொரோனா வைரசுக்கு தமிழகத்தில் ஏற்கனவே மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது கன்னியாகுமரியில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது