காட்சிகளை மாற்றாவிட்டால் ரிலீஸ் செய்ய விடமாட்டோம்: தீபிகா படுகோனுக்கு உள்துறை அமைச்சர் எச்சரிக்கை!

பிரபல நடிகை நடித்த திரைப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடலில் சர்ச்சிக்குரிய வகையில் அவர் உடை அணிந்து இருந்ததை அடுத்து மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் மற்றும் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்த திரைப்படம் ‘பதான்’. இந்த படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’பேஷ்ரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

இந்த பாடலில் தீபிகா படுகோனே உச்சபட்ச கிளாமரில் இருந்தார் என்பதும் குறிப்பாக அவர் பிகினியில் இருந்த காட்சிகள் ரசிகர்களை அதிர வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடல் குறித்து கருத்து தெரிவித்த மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பாடலில் திருமதி தீபிகா படுகோனின் உடைகள் மிகவும் ஆட்சேபனைக்கு உரியது என்றும், அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டுள்ளது போல் தெளிவாக தெரிகிறது என்றும், இந்த பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகளை சரி செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் இந்த படத்தை மத்திய பிரதேசத்தில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்படுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் சூழ்நிலை வரும் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சரின் இந்த கருத்து படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘பாய்காட் பதான்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முதல்முறையாக மகன்கள் குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்.. என்ன சொன்னார் தெரியுமா?

இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அவர் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் என்பது தெரிந்ததே.

மலர் தூவி வரவேற்ற பிக்பாஸ் ராம் குடும்பத்தினர்.. வீடியோ வைரல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகிய ராம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட நிலையில் அவருடைய குடும்பத்தினர் அவரை மலர் தூவி வரவேற்கும் காட்சியின் வீடியோ

'ஈரம்' அறிவழகனின் அடுத்த படம்.. அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

ஆதி நடித்த 'ஈரம்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அறிவழகன் இயக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

அமைச்சர் உதயநிதிக்கு கமல், ரஜினி வாழ்த்து.. விஷாலின் வேண்டுகோள் என்ன தெரியுமா?

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர்

அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி.. முதல் கையெழுத்து என்ன தெரியுமா?

தமிழக அமைச்சராக முதலமைச்சர் முக ஸ்டாலின் மகனும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு