close
Choose your channels

மலர் தூவி வரவேற்ற பிக்பாஸ் ராம் குடும்பத்தினர்.. வீடியோ வைரல்

Wednesday, December 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகிய ராம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட நிலையில் அவருடைய குடும்பத்தினர் அவரை மலர் தூவி வரவேற்கும் காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ராம் என்பதும் இந்த நிகழ்ச்சியில் 62 நாட்கள் வரை அவர் தாக்குபிடித்து அதன்பின் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. ராம், ஆயிஷா ஆகிய இருவரும் அடுத்தடுத்த நாட்களில் வெளியேற்றப் பட்ட நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ராம், தனது வீட்டிற்கு செல்லும் போது அவருடைய மனைவி, மகன், மகள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்ற காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி உள்ளது.

குறிப்பாக ராம் ராமசாமியின் செல்ல மகள் அவரை கட்டிப்பிடித்து வரவேற்கும் காட்சியும் அவருடைய மகன் அவருக்கு மலர்களை தூவி வரவேற்ற காட்சியை பார்க்கும் போது ’குடும்பத்தை விட பெரியது வேறெதுவும் இல்லை என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளது 100 சதவீத உண்மை என்பது தெரிய வருகிறது.

இந்த வீடியோ ராம் ராமசாமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.