விஷால்-மிஷ்கின் படத்தில் இணைந்த கமல் மகள்

  • IndiaGlitz, [Saturday,October 08 2016]

சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து முடித்துள்ள 'கத்திச்சண்டை' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் விஷாலின் அடுத்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கி வருகிறார்.
'துப்பறிவாளன்' என்ற டைட்டிலில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஷாலுடன் ராகுல் ப்ரித்திசிங், வினய், பிரசன்னா, கே.பாக்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது கமல்ஹாசனின் இளையமகள் அக்சராஹாசன் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த செய்தியை விஷால் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படத்தில் ஒவ்வொரு பிரபலங்களாக இணைந்து கொண்டே வருவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
அரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கின்றது.

More News

தேவி - திரை விமர்சனம்

இயக்குனர் விஜய், பிரபுதேவா, தமன்னா ஆகியோர் இணைந்திருக்கும் ‘தேவி’,.

சிம்புவின் 'AAA' டீசர் விமர்சனம்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் டீசர் இன்று நள்ளிரவு...

சிம்பு ரசிகர்களுக்கு கிடைக்கும் அட்வான்ஸ் விருந்து

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசரை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்...

றெக்க திரை விமர்சனம் : கொஞ்ச தூரம் பறக்கிறது

விஜய் சேதுபதியின் முதல் மாஸ் முயற்சி என்பதே றெக்கைக்கு ரசிகர்களின் மனதில் கிடைத்த மிக பெரிய எதிர்பார்ப்பு...