close
Choose your channels

விஷால்-மிஷ்கின் படத்தில் இணைந்த கமல் மகள்

Saturday, October 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து முடித்துள்ள 'கத்திச்சண்டை' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் விஷாலின் அடுத்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கி வருகிறார்.
'துப்பறிவாளன்' என்ற டைட்டிலில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஷாலுடன் ராகுல் ப்ரித்திசிங், வினய், பிரசன்னா, கே.பாக்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது கமல்ஹாசனின் இளையமகள் அக்சராஹாசன் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த செய்தியை விஷால் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படத்தில் ஒவ்வொரு பிரபலங்களாக இணைந்து கொண்டே வருவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
அரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.