விஜய்-அமலாபால் இணைந்து எடுத்த முக்கிய முடிவு

  • IndiaGlitz, [Saturday,August 06 2016]

கடந்த சில நாட்களாக இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலாபால் ஆகிய இருவரும் விவகாரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சமீபத்தில் இதுகுறித்து இயக்குனர் விஜய் நீண்ட விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில் தனக்கும் அமலாபாலுக்கு இடையே நேர்மையும் நம்பிக்கையும் இல்லாததே பிரிவுக்குக் காரணம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று இருவரும் இணைந்து சட்டப்படி பிரிவதற்காக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளனர். நடிகை அமலா பால் சார்பில் அவரது வழக்கறிஞர் சாய் ஜோஸ் கிடங்கூர் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் - அமலா இருவரும் பரஸ்பர விருப்பத்தின் பேரில் இந்த விவாகரத்து மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

More News

வில்லன் நடிகருக்கு ஜோடியாகும் செல்வராகவன் நாயகி

'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ரெஜினா, தற்போது செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் நேற்று சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றது என்பதை பார்த்தோம்.

ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் ஒரு இந்திய இயக்குனர்?

தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்தாலே மிகப்பெரிய விஷயமாக கருதப்படும் நிலையில் ஒரு திரைப்பட இயக்குனரின் சம்பளம் மட்டுமே ரூ.100 கோடி என்ற தகவல் இந்திய திரையுலகினர் அனைவருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது....

மகேஷ்பாபு படத்தில் இணைந்த 'கபாலி' இரட்டையர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் வசூல் இந்திய திரையுலகையே ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த டெக்னீஷியன்களுக்கும் பெரிய பட்ஜெட் படங்களில் பணிபுரிய வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

வீடு திரும்பினார் கமல்ஹாசன். 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு எப்போது?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததால் காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது...