எவன்டா இந்த படத்தின் டைரக்டர்? 'ஏ' சர்டிபிகேட் பெற்ற கலையரசன் படம்..!

  • IndiaGlitz, [Monday,March 25 2024]

கலையரசன், சாண்டி உள்பட பலர் நடித்த ’ஹாட்ஸ்பாட்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த ட்ரெய்லருக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு தற்போது சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதை அடுத்து இது குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள வீடியோவில் எவன்டா இந்த படத்தின் டைரக்டர்? என்பது உட்பட பலருடைய கடுமையான விமர்சனங்களும் இடம்பெற்றுள்ளது.

கலையரசன், சாண்டி, அம்மு அபிராமி, சோபி, ஜனனி உள்பட பலர் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஹாட்ஸ்பாட்’. இந்த படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் சென்சார் முடிந்து ’ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற விளம்பரத்துடன் படக்குழுவினர்கள் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் இந்த படத்தின் டிரைலருக்கு கிடைத்த கண்டனங்களை பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பாக எவன்டா இந்த படத்தின் டைரக்டர்? என்ற கண்டனமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களைப் பற்றி விமர்சனம் செய்த பதிவுகளையே விளம்பரமாக பயன்படுத்தி உள்ள படக்குழுவினரின் யுக்தி எந்த அளவுக்கு படத்தின் வெற்றிக்கு உதவும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More News

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: துலாம் ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில், 2024 குரோதி வருடம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

பாஜக வேட்பாளராக களமிறங்கும் ராகவா லாரன்ஸ் பட நாயகி.. வெற்றி கிடைக்குமா?

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன

ஓடஓட விட்ட ஹர்திக் பாண்ட்யா.. 'நீ இந்தியா டீமுக்கு வா பார்த்துக்கிறேன்'.. ரோஹித் சர்மாவின் மைண்ட் வாய்ஸ்

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அந்த அணியின் சீனியர் வீரரான ரோஹித்

பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் தோழா: ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டிட்யூட்.. ருத்ராஜின் பணிவு..

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரோகித் சர்மாவை அலைக்கழித்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் செயலுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்

ரிபெல்' வெற்றியை அடுத்து 2 படங்களின் ரிலீஸ் தேதி .. ஜிவி பிரகாஷின் அடுத்தடுத்த படங்கள்..!

ஜிவி பிரகாஷ் நடித்த ரிபெல்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.