close
Choose your channels

ரிபெல்' வெற்றியை அடுத்து 2 படங்களின் ரிலீஸ் தேதி .. ஜிவி பிரகாஷின் அடுத்தடுத்த படங்கள்..!

Monday, March 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் நடித்த ரிபெல்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜிவி பிரகாஷ் நடித்த ரிபெல்’ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது ஏப்ரல் 4ஆம் தேதி அவர் நடித்த ’கள்வன்’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த கட்டமாக ஜிவி பிரகாஷ் நடித்த ’டியர்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படம் ’கல்வன்’ ரிலீஸ் ஆன அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 11ஆம் தேதியில் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 11 என அடுத்தடுத்து இரண்டு வாரங்களில் இரண்டு ஜீவி பிரகாஷ் படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ், அர்ஜுன் என்ற கேரக்டரிலும் ஐஸ்வர்யா ராஜேஷ், தீபிகா என்ற கேரக்டரிலும் நடித்திருக்கும் ’டியர்’ படத்தை ஆனந்த் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கி உள்ளார். ஜி. பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படம் ஒரு ரொமான்ஸ் படம் என்றும் இந்த படம் நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ் பிஸியாக இருக்கும் நிலையில் ஒரு ஹீரோவாகவும் அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.