close
Choose your channels

படம் புடிக்கலைனா என்ன செருப்பால அடிங்க.. கடந்த வாரம் ரிலீசான படத்தின் இயக்குனர் பேட்டி..!

Tuesday, April 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் வெளியான திரைப்படத்தின் இயக்குனர் ’தயவு செய்து தியேட்டருக்கு வந்து படம் பாருங்கள், ஒருவேளை நீங்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்த்தபின் உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் கூட அடியுங்கள்’ என்று பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் வெளியான படங்களில் ஒன்று ’ஹாட்ஸ்பாட்’ என்பதும் இந்த படம் பத்திரிகையாளர் காட்சியிலும், முதல் காட்சியிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்ற நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’ஹாட்ஸ்பாட்’ திரைப்படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்த மக்கள் எல்லோருமே என்ஜாய் பண்ணுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இன்னும் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் வரவில்லை என்று நினைக்கிறேன்.

ஒருவேளை ட்ரைலர் பார்த்தவர்கள் சில பேர் ஏமாற்றம் அடைந்து வராமல் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. மலையாள படங்களுக்கு நீங்கள் அந்த அளவுக்கு சப்போர்ட் செய்கிறீர்கள், ஆனால் உண்மையாகவே ஒரு நல்ல படம் பண்ணி இருக்கிறோம், இப்பவும் இந்த படம் குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நான் உறுதியாக ஒரு விஷயம் சொல்கிறேன், நீங்கள் கண்டிப்பாக வந்து படம் பார்த்தால் அந்த படம் பிடிக்கும்.

ஒருவேளை உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் கூட நீங்கள் அடிக்கலாம், நான் ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை, கண்டிப்பாக நீங்கள் தியேட்டருக்கு வந்து பார்த்தால் நன்றாக இருக்கு, சூப்பராக இருக்கிறது என்று தான் சொல்வீர்கள், ஒருவேளை இந்த படத்திற்கு ஏண்டா வந்தோம் என்று நீங்கள் நினைத்தால் என்னை செருப்பால் கூட அடியுங்கள்’ என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment