சென்னை மாயாஜாலில் மட்டும் 'விக்ரம்' எத்தனை காட்சிகள் தெரியுமா?

சென்னை மாயாஜால் திரையரங்க வளாகத்தில் ‘விக்ரம்’ படம் இன்று எத்தனை காட்சிகள் திரையிடப்படுகிறது என்று வெளியான தகவல் சினிமா ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

16 ஸ்க்ரீன்கள் கொண்ட சென்னை மாயாஜால் வளாகத்தில் இன்று மட்டும் கமலஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் 230 காட்சிகள் திரையிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் கமல்ஹாசனின் திரையுலக வரலாற்றில் ஒரு சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி இன்றைய அனைத்து காட்சிகளுக்குமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது என்பது ஒரு கூடுதல் சாதனையாக கருதப்படுகிறது.

இந்த உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் முதல் காட்சி முடிந்த உடனே இந்த படத்திற்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த படம் தமிழில் வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று என்பது இந்த விமர்சனங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

தனக்குத் தானே திருமணம்… இந்திய இளைஞர்களை அலறவைக்கும் தகவல்!

குஜராத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் திருமணம் தற்போது இந்தியா முழுக்கவே பேசுபொருளாகி இருக்கிறது. காரணம்

ரஜினியை சந்தித்தாரா அஜித்? வைரல் புகைப்படத்திற்கு சுரேஷ் சந்திரா விளக்கம்!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நடிகர் அஜித் சந்தித்துள்ளதாக புகைப்படத்துடன் வைரலாகி வரும் செய்திக்கு அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.

'விக்ரம்' படத்திற்கு முதல் விமர்சனம் தந்த நடிகர்: கமல்ஹாசனின் ரியாக்சன்

விக்ரம் படத்தை பார்த்து முதல் முதலாக விமர்சனம் செய்த பிரபல நடிகருக்கு உலகநாயகன் கமலஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ளார். 

வெண்ணிலா கபடிக்குழு' நடிகருக்கு இப்படி ஒரு நிலையா? 

இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய முதல் திரைப்படமான 'வெண்ணிலா கபடி குழு' என்ற திரைப்படம் பலரை பிரபலப்படுத்தியது என்று கூறலாம். சுசீந்திரன் மட்டுமின்றி விஷ்ணு விஷால், சரண்யாமோகன்,

பிரபல நடிகரின் படத்தை பார்த்தவுடன் வரிவிலக்கு அறிவித்த முதலமைச்சர்!

பிரபல நடிகரின் படத்தை பார்த்து அந்த படத்திற்கு முதலமைச்சர் வரிவிலக்கு அறிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.