close
Choose your channels

ரஜினியை சந்தித்தாரா அஜித்? வைரல் புகைப்படத்திற்கு சுரேஷ் சந்திரா விளக்கம்!

Thursday, June 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நடிகர் அஜித் சந்தித்துள்ளதாக புகைப்படத்துடன் வைரலாகி வரும் செய்திக்கு அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை அவ்வப்போது பிரபல நடிகர்கள் சந்தித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். இன்று கூட நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் நடிகர் அஜித் இன்று ரஜினியை அவரது வீட்டில் சந்தித்ததாக கூறப்படுவதோடு, இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ரஜினியை அஜித் சந்தித்ததாக கூறப்படும் தகவல் பொய்யானது என்றும் இணையதளத்தில் உலாவரும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.