'விடாமுயற்சி' படத்திற்காக அனிருத் கம்போஸ் செய்தது எத்தனை பாடல்கள்?

  • IndiaGlitz, [Friday,December 22 2023]

அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்காக எத்தனை பாடல்கள் கம்போஸ் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

‘விடாமுயற்சி’ படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்று இருப்பதாகவும், அனைத்து பாடல்களையும் அனிருத் கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன

ஏற்கனவே இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் தற்போது அதிரடி ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதை அடுத்து மீதமுள்ள இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு விரைவில் நடக்கும் என்று கூறப்படுகிறது

அஜித், த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

More News

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற 'உடன்பால்'.. படக்குழுவினர் பெருமிதம்..!

கடந்த சில நாட்களாக சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் அதில் பல முக்கிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

மாறுவேடத்தில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் ரோஜா.. வைரல் வீடியோ..!

தமிழ் தெலுங்கு திரை உலகின்  முன்னணி நடிகையாக இருந்த ரோஜா, தற்போது ஆந்திர மாநில அமைச்சராக இருக்கிறார் என்பதும் அவர்  ஆந்திராவின் மிகச்சிறந்த அமைச்சர்களின்

நீண்ட இடைவெளிக்கு பின் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு.. முக்கிய கேரக்டரில் 'பீஸ்ட்' நாயகி..!

 பழம்பெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படம் தயாரிக்க இருக்கும் நிலையில் அதில் முக்கிய கேரக்டரில் 'பீஸ்ட்' படத்தில் நடித்த நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக

இந்த ஒரு வீடியோ விக்ரம் எவிக்சனை மாற்றுமா? வெளியேற்றத்தை தடுக்குமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் விக்ரம், ரவீனா மற்றும் விசித்ரா ஆகிய மூன்று பேர்கள் மட்டுமே நாமினேஷனில் உள்ள நிலையில்  தற்போது வந்துள்ள தகவலின்படி விக்ரம் தான் குறைவான

சிறகடிக்க ஆசை: முத்து-மீனாவை வெளியேற்ற திட்டம்.. விஜயா சதியை முறியடிப்பாரா அண்ணாமலை?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறைந்த நாட்களிலேயே இந்த சீரியல் மக்கள் மனதை கவர்ந்து விட்டது என்பதையும்