close
Choose your channels

'விடாமுயற்சி' படத்திற்காக அனிருத் கம்போஸ் செய்தது எத்தனை பாடல்கள்?

Friday, December 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்காக எத்தனை பாடல்கள் கம்போஸ் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

‘விடாமுயற்சி’ படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்று இருப்பதாகவும், அனைத்து பாடல்களையும் அனிருத் கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன

ஏற்கனவே இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் தற்போது அதிரடி ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதை அடுத்து மீதமுள்ள இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு விரைவில் நடக்கும் என்று கூறப்படுகிறது

அஜித், த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos