close
Choose your channels

'தி லெஜண்ட்' திரைப்படத்திற்கு இத்தனை ஆயிரம் திரையரங்குகளா?

Thursday, July 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொழிலதிபர் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 2,500 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ரஜினிகாந்த், அஜீத், விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் மட்டுமே உலகம் முழுவதும் இரண்டாயிரம் திரையரங்குகளுக்கு மேலாக வெளியாகி வரும் நிலையில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் முதல் படத்தில் நடிக்கும் சரவணன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு உள்ளது என்பதும் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகும் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில நாட்களாக படக்குழுவினர் உலகம் முழுவதும் புரமோஷன் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரெளட்டாலா, விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டர்ன், யோகிபாபு, ரோபோ சங்க உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment